Tamil News Live Update: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பீஸ்ட் பார்க்க குவிந்த ரசிகர்கள்!

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், சென்னைக்கு திரும்ப ஏதுவாக ஏப்ரல் 17ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

IPL 2022: ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட்  இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே – 95, உத்தப்பா – 88 ரன்கள் எடுத்தனர். 217 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Tamil Nadu news live update

டிடிவி தினகரனிடம் விசாரணை!

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரமாக விசாரணை நடத்தினர். ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி கடிதம் அளித்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறையில் டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார்.

உ.பி. மேலவை தேர்தல்!

உத்தரப்பிரதேச மாநிலம் மேலவை தேர்தலில் 36 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் உ.பி.யில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு ஆளுங்கட்சி மேலவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்துள்ள BA-4, BA-5 என்ற 2 புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக உத்தரவு!

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தை கருத்தை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏப்ரல் 22ஆம் தேதி ஆஜராக, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை ஆஜராக உத்தரவிட்டபோது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

Live Updates
10:33 (IST) 13 Apr 2022
ஷீரடி- சென்டிரல் ரயில் சேவை!

வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும், சாய்நகர் ஷீரடி- சென்னை சென்டிரல் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

10:15 (IST) 13 Apr 2022
கோடை மழை.. உப்பு உற்பத்தி பாதிப்பு!

கோடை மழையால் தூத்துக்குடியில் 60 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

09:49 (IST) 13 Apr 2022
மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இன்சுலின், தைராய்டு மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

09:04 (IST) 13 Apr 2022
சட்டப்பேரவையில் இன்று!

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.

09:03 (IST) 13 Apr 2022
வைகை அணை தண்ணீர் மதுரை வந்தது!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 11ல் திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை வந்தடைந்தது.

09:03 (IST) 13 Apr 2022
நான் நிரபராதி.. டிடிவி தினகரன்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி. இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார் என்று10 மணி நேர அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் கூறினார்.

09:02 (IST) 13 Apr 2022
தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

09:02 (IST) 13 Apr 2022
சராசரியை விட அதிக மழை பெய்யும்!

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும். பஞ்சாப், அரியான உத்தரப்பிரதேச மாநிலங்களில் சராசரியை விட அதிக மழை பெய்யும் என ஸ்கைமெட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.