காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கும் சீனா.. எதற்காக தெரியுமா..?!

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக விளங்கும் சீனா-வை தலைமையிடமாகக் கொண்ட இரு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும், குறிப்பாக அமெரிக்கத் துறைமுகத்தில் இருக்கும் கண்டெய்னர்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.

சீன நிறுவனங்களின் வேலையைக் கண்டு தற்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் அதிர்ந்து உள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது.. எதற்காகச் சீன நிறுவனங்கள் காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கிறது..?

சீனாவின் மாஸ்டர் பிளான்.. உலக நாடுகள் கடும் பாதிப்பு..!

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

இரண்டு சீன நிறுவனங்கள் அமெரிக்கத் துறைமுகத்தில் இருந்து சரக்கு உடன் இருக்கும் கண்டெய்னர்களைக் காட்டிலும், காலி கண்டெய்னர்களை அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது சிஎன்பிசி தற்போது கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்கத் துறைமுகங்கள்

அமெரிக்கத் துறைமுகங்கள்

போர்ட் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட் ஆஃப் லாங் பீச், யு.எஸ் கஸ்டம்ஸ் மற்றும் ஐஹெச்எஸ் மார்கிட் PIERS ஏற்றுமதி இறக்குமதி தரவுகளை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் PIERS அமெரிக்கக் கஸ்டம்ஸ் சரக்கு கப்பலின் கண்காணித்துத் தரவுகளைச் சேகரித்து வருகிறது.

OOCL, Cosco நிறுவனம்
 

OOCL, Cosco நிறுவனம்

ஹாங்காங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் OOCL மற்றும் ஷாங்காய்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதன் தாய் நிறுவனமான காஸ்கோ ஆகிய அதிகப்படியான காலி கண்டெய்னர்களை அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளதாகச் சிஎன்பிசி ஆய்வுகள் கூறுகிறது.

காலி கண்டெய்னர்கள்

காலி கண்டெய்னர்கள்

2020 மற்றும் 2021 தரவுகள் படி OOCL சரக்குக் கொண்ட கண்டெய்னர்களின் ஏற்றுமதி 35.1 சதவீதம் சரிந்த நிலையில், காலி கண்டெய்னர்களை ஏற்றுமதி 104.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் காஸ்கோ சரக்குக் கொண்ட கண்டெய்னர்களின் ஏற்றுமதி வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில், காலி கண்டெய்னர்களை ஏற்றுமதி 104.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்குப் பாதிப்பு

அமெரிக்காவுக்குப் பாதிப்பு

காலி கண்டெய்னர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் காரணத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் போதுமான கண்டெய்னர்கள் இல்லாமல் காலதாமதமாகவும், அதிக விலை கொடுத்துக் கண்டெய்னர்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவின் தயாரிப்புகளின் விலை தானாக உயர்கிறது.

ஆய்வு

ஆய்வு

தற்போது அமெரிக்காவின் மத்திய கடல்சார் ஆணையம் விதிமுறை மீறப்பட்டு உள்ளதா, இதற்கான விதிமுறைகள் இடங்கொடுக்கிறதா என்பதை ஆய்வு செய்யத் துவங்கியது மட்டும் அல்லாமல் , தரவுகள் ஆய்வு செய்து சீன நிறுவனங்களான OOCL மற்றும் COSCO ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது.

கொரோனா

கொரோனா

சீனா நிறுவனங்கள் காலி கண்டெய்னர்கள் வாங்கும் வழக்கத்தைக் கொரோனா தொற்று துவங்கிய நாளில் இருந்தே செய்து வருகிறது. இதற்குப் பின்பு இருக்கும் அடிப்படை காரணத்தையும், பலன்கள் குறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China based OOCL, Cosco cos shipping more empty containers than loaded from US ports

China based OOCL, Cosco cos shipping more empty containers than loaded from US ports காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கும் சீனா.. எதற்காகத் தெரியுமா..?!

Story first published: Thursday, April 14, 2022, 13:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.