திருவள்ளூர் அதிமுக உட்கட்சி தேர்தலில் கடும் மோதல்

திருவள்ளூரில் அதிமுக உட்கட்சி தேர்தலில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலையிலேயே அதிமுக தொண்டர்களில் இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட  மாவட்ட , ஒன்றிய, நகர ,பேரூராட்சி, அதிமுக நிர்வாகிகளுக்கான விருப்ப மனு தேர்தல் கடந்த 11-ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
image

இந்தத் தேர்தலில் திருவலாங்காடு ஒன்றிய செயலாளர்  பதவிக்கு  திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கொட்டாமேடு கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரை தற்போதைய திருவலாங்காடு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் நடைபெற்ற இடத்திலேயே விருப்ப மனு தாக்கல் செய்யவிடாமல், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர்முன்னிலையில் நாற்காலி கொண்டும், கைகளாலும் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
image
அதன் பின்னர் தலையில் கட்டு போட்டவாறு  வந்து மீண்டும் திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோட்டைமேடு கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதும் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.