தென் ஆப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 306-ஆக உயர்வு.!

தென் ஆப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 306-ஆக உயர்ந்துள்ளது.

கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக அதீத கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.

கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இறங்கலை தெரிவித்த அவர், பருவநிலை மாற்றம் காரணமாக இந்த இயற்கை பேரிடர் நடந்துள்ளதாகவும் , பருவநிலை மாற்றத்தை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை இனிமேலும் தள்ளிபோட கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.