மாத ராசிபலன்

சித்திரை மாத ராசிபலன் – ஏப்ரல் 14 முதல் மே 14 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன்.

மேஷ ராசி அன்பர்களே!

பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். . குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களுடன் வீண் விரோதம் வரக்கூடும். மாதப் பிற் பகுதியில் கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சிலருக்கு தடைபட்ட திருமணம் கூடி வரும். சகோதர வகையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யவும். தந்தைவழி உறவினர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மாதப் பிற்பகுதியில் எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பிற்பகுதியில் வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலையே காணப்படும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. கணவரின் அன்பும் ஆதரவும் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,16,25,28,30, மே 2,6,9,12

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 18 இரவு முதல் 19, 20

பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவு தேவைக்கும் சற்று அதிகம் கிடைப்பதால் செலவுகள் போக சிறிது சேமிக்கவும் முடியும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவி இருவருக்குமிடையே மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாதப் பிற்பகுதியில் தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கவும், அவர்கள் மூலம் பொருளாதாரரீதியாக நல்ல திருப்பம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறி யானாலும் முடிந்துவிடும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர்களுடன் கனிவான அணுகுமுறை மிகவும் அவசியம். பற்று வரவில் பிரச்னை எதுவும் இல்லை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக் கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.

வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14,18,,19,26,29, மே 1,5,9,11

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 21, 22, 23 காலை வரை

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

மிதுன ராசி அன்பர்களே!

தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கி டையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச் னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் வீடு, நிலம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். அவருடைய தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கக்கூடும்.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட பிணக்குகள் சுமுக நிலை ஏற்படும். சகோதரர்களால் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமானாலும் கிடைத்துவிடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,17,19,29, மே 3,6,9,12

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 23 காலை முதல் 24, 25 காலை வரை

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட நன்மை ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

எதிலும் வெற்றியே பெறுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கி, ஒற்றுமை ஏற்படும். உங்கள் முயற்சி களுக்குக் குடும்பத்தினரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டாலும் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். பழைய கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டியது அவசியம். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத முற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகுதியில் அவர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அதிக அலைச்சலைத் தருவதுடன் வீண் விரயத்தையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வது சற்று மனவருத்தம் தரும். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது.

வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். பங்குதாரர்கள் வியாபார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணியாளர்களும் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அக்கம்பக்கத்தில் இருக் கும் பெண்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16,19,22,23,30, மே 1,3,6,10

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 25 காலை முதல் 26, 27 பிற்பகல் வரை

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அடுத் தடுத்து தொடர்ந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்து கொண்டு விலகிவிடுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள். சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். மாதப் பிற்பகுதியில் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்கள் ஏனோ தானோ என்று வேலை பார்ப்பார்கள். சற்று கண்டிப்புடன் நடந்துகொள்வது நல்லது. சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

பெண்களுக்கு, கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அடகில் வைத்திருந்த நகைகளை மீட்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தோழிகளின் ஆதரவு உற்சாகம் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,17,19,20,23,25 மே 3,6,11,13

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 27 பிற்பகல் முதல் 28, 29 மாலை வரை

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும் நலம் சேர்க்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய மாதம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அடுத்தடுத்து பிரச்னைகள் வந்தாலும் தெய்வ அனுகிரகத்தால் சுலபமாகச் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைப்பதுடன், அவர்களில் சிலரால் சங்கடங்களும் ஏற்படக்கூடும். சிலருக்கு உஷ்ணம் தொடர்பான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளால் ஏற்படும் தேவையற்ற பிரச்னைகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். மேலும் செரிமானப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வெளியில் செல்ல நேரிடும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

மாத முற்பகுதியில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுடன் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். மாதப் பிற்பகுதியில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதை யும் அதிகரிக்கும். வீட்டில் இருந்தபடி அலுவலக வேலைகளைப் பார்க்கும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,18,20,27, 28, மே 5,8,12,13

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 29 மாலை முதல் 30, மே 1, 2 காலை வரை

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மைகளைத் தரும்.

துலா ராசி அன்பர்களே!

பொருளாதார வசதி திருப்திகரமாக உள்ளது. எதிர்பாராத பல நன்மை கள் நடைபெறும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை யில் பொறுமை அவசியம். சிலருக்கு விடுபட்டுப் போன குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற் றும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வீடு மாறும் முயற்சியை இந்த மாதம் தவிர்த்துவிடவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராதபடி லாபம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரி களால் ஏற்பட்ட போட்டிகள் குறையும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுகூலமாக இருப்பர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,18,21,24,29 மே 1,7,10, 14

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சந்திராஷ்டம நாள்கள்: மே 2 பிற்பகல் முதல் 3, 4 பிற்பகல் வரை

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபட பிரச்னைகள் குறையும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

ஓரளவுக்கு சாதகமான மாதம். பணவரவு போதுமான அளவுக்கு இருக்கும். செலவுகளும் குறைவாகவே இருப்பதால் கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்பது ஆறுதலான விஷயம். அந்நியர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தாலும் சாதகமாக முடியும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் பிறருக்குக் கொடுத்து வராது என்று விட்டுவிட்ட கடன் தொகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வீடு மாறும் எண்ணம் இருந்தால்,அதற்கான முயற்சியை மாதப் பிற்பகுதியில் மேற்கொள்வது சாதகமாக முடியும். மாத முற்பகுதியில் தாய்மாமன் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு குடும்பத்தோடு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். புகுந்த வீட்டினரின் அன்பும் ஆதரவும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். பிள்ளைகள் அனுசரணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,19,20,22,24,27 மே 1,8,11

அதிர்ஷ்ட எண்கள்: 2, 8

சந்திராஷ்டம நாள்கள்: மே 4 பிற்பகல் முதல் 5, 6

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதும், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.

தனுசு ராசி அன்பர்களே!

எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவ னம் தேவை. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சிலருக்கு பிள் ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நீண்டநாள்களாக நிறை வேற்ற முடியாமல் போன தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டி யாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வீட்டு வேலைகளில் கணவர் மற்றும் பிள்ளைகளின் உதவி உற்சாகம் தரும். பெற்றோர் வீட்டில் இருந்து எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15,18,20,21,25,28 மே 1,2,5,12

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சந்திராஷ்டம நாள்கள்: மே 7, 8, 9 பிற்பகல் வரை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மகிழ்ச்சி பெருகும்.

மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத் தோடு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெறும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அரசாங்க அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல திருப்பம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

வியாபாரம் வழக்கம்போல் நடைபெற்றாலும் வீண் விரயங்களும் ஏற்படும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமாக நடந்துகொள்ளவும். பணியாளர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16,18,22,26,29 மே 1,4,7,14

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

சந்திராஷ்டம நாள்கள்: மே 9 பிற்பகல் முதல் 10, 11 மாலை வரை

பரிகாரம்: துர்கை வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

கும்ப ராசி அன்பர்களே!

பொருளாதார வளம் கூடும். உடல்நலம் மேம்படும். சிலருக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் மறைந்து, செல்வாக்கு அதிகரிக்கும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். மாத முற்பகுதியில் சகோதரர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிற்பகுதியில் அவர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் கூடும். லாபம் அபரிமிதமாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.

பெண்களுக்கு உற்சாகம் தரும் மாதம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் உறவினர்களிடையே உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 20,24,28,30 மே 2,5,8,9

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 14 பிற்பகல் முதல் 15, 16 இரவு வரை மே 11 மாலை முதல் 12, 13 இரவு வரை

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

மீன ராசி அன்பர்களே!

நின்று நிதானித்து செயல்படவேண்டிய மாதம். புதிய முயற்சிகளில் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும். குடும்பத்தினர் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாகக் கட்டுப் படுவர். பிள்ளை களின் பிடிவாதப்போக்கு மாறி, உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார் கள். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் ஏற்படாது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். புதிய மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அரசாங்க வகையில் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். மாதப் பிற்பகுதியில் வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அனுகூலப் பலன்கள் ஏற்பட்டாலும் சில பிரச்னை களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடு செய்யும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்யவும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளிடம் எதிர் பார்த்த பணம் கிடைக்கும். தாய்வீட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 21,25,28,30 மே 2,4,8,10

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

சந்திராஷ்டம நாள்கள்: ஏப் 16 இரவு முதல் 17, 18 இரவு வரை மற்றும் மே 13 இரவு முதல் 14

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.