பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயங்களில் ஒன்று தான் என்றாலும், கடந்த சில மாதங்களாக அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் தான் ஏப்ரல் மாதத்தில் இதுவரையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவின் மதிப்பு, 1100 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது?
கடந்த புதன் கிழமை நிலவரப்படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, அவரின் மனைவியின் போர்ட்போலியோவின் மதிப்பானது 32,667 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

போர்ட்போலியோ மதிப்பு சரிவு
இது கடந்த மார்ச் காலாண்டின் இறுதியில் 33,754 கோடி ரூபாயாக இருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரையில் சுமார் 1084 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் விருப்பமான பங்குகள் சரிவினைக் கண்டதையடுத்து, போர்ட்போலியோ மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்
குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த டைட்டன் நிறுவன பங்கினில் ஜுன்ஜுன்வாலாவின் வசம் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, 5.1 சதவீதம் பங்கானது இருந்தது. இப்பங்கின் விலையானது நடப்பு மாதம் தொடங்கி இதுவரை 3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இப்பங்கினில் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தின் மதிப்பானது 11,106.90 கோடி ரூபாயாகும்.

வாங்கலாம்
எம்கே குளோபல் நிறுவனம் டைட்டன் நிறுவன பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை 2900 ரூபாயாகவும் கணித்துள்ளது. இதன் தற்போதைய விலை நிலவரம் 2456.25 ரூபாயாகும். இது ஒரு வருடத்திற்குள் இந்த இலக்கினை எட்டலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. ஜுவல்லரி துறையை சேர்ந்த இந்த நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 2,18,706 கோடி ரூபாயாகும்.

ஸ்டார் ஹெல்த் அலைடு இன்சூரன்ஸ்
ஸ்டார் ஹெல்த் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இந்த மாததில் 3% அதிகரித்துள்ளது. மார்ச் 16 அன்று இப்பங்கின் விலை 20% அதிகரித்து, 609.25 ரூபாயாக அதிகரித்தது. இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம் 17.5% பங்குகள் இருந்தது. கடைசியாக இதன் மதிப்பு 7392.3 கோடி ரூபாயாகும்.

20% அதிகரிக்கலாம்
பட்டியலிட்டதில் இருந்து இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றம் காணவில்லை. இது பட்டியலிடப்பட்டதில் இருந்து 30% சரிவினைக் கண்டுள்ளது. பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து ஐபிஓ-விலையினையும் தொடவில்லை. எனினும் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இப்பங்கின் விலையானது 20% ஏற்றம் காணலாம் என்று கணித்துள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் இந்த நிறுவனத்தில் 17.5% பங்கினை வைத்துள்ளார்.

மெட்ரோ பிராண்ட்ஸ்
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தில் ரேகா ஜுன் ன்வாலா வசம் 14.4% பங்குகள் உள்ளது. இப்பங்கானது இம்மாதத்தில் 2.9% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் வீலையானது 33% அதிகரித்துள்ளது. ரேகாவின் வசம் இப்பங்கில் 2360.8 கோடி ரூபாய் உள்ளது. இப்பங்கினை 4 ஆய்வாளர்களில் மூவர் வாங்கலாம் என்றும், ஒருவர் விற்பனை செய்யலாம் என்றும் கணித்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டில் ஜுன்ஜுன்வாலா வசம், 1.2% பங்குகள் இருந்தன. இந்த மாதத்தில் இதுவரை அரை சதவீதம் சரிந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 1698.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை ஜுன்ஜுன்வாலா வைத்துள்ளார்.

டாடா மோட்டாரினை வாங்கலாம்
இந்த நிறுவனம் சிப் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வலுவான தேவை இருந்து வரும் நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், எடில் வைஸ் நிறுவனம் இப்பங்கினை ஏற்றம் காணலாம் என்றும் , இதன் இலக்கு விலை 616 ரூபாய் என்றும் கணித்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 40% ஆகும்.
rakesh jhunjhunwala loses Rs.1100 crors in April so far
rakesh jhunjhunwala loses Rs.1100 crors in April so far/ரூ.1100 கோடியை இழந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. 9 நாட்களில் ரொம்ப மோசம்..!