ரூ.2 லட்சம் வரை கூடுதல் நன்மை; எஸ்பிஐ வங்கியின் சூப்பர் ஆஃபர்

SBI rupay card offers Rs.2 lakh insurance for Jan dhan account holders: எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை இலவச சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகை என்ன? யார் எல்லாம் இதற்கு தகுதியானவர்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கணக்கு வைத்திருந்தால், உங்களுக்கு இந்த கூடுதல் கிடைக்கும். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ, அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை இலவச பலன்களை வழங்குகிறது. இருப்பினும், ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்தும் SBI ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பலன்கள் கிடைக்கும்.

தகுதியுள்ள அனைத்து எஸ்பிஐ ஜன்-தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். ஆகஸ்ட் 28, 2018க்கு முன் அல்லது அதற்குப் பிறகு வாடிக்கையாளர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்கைத் திறந்தாரா என்பதைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

ஆகஸ்ட் 28, 2018க்கு முன் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கைத் தொடங்கிய வாடிக்கையாளர்களின் RuPay PMJDY கார்டு ரூ. 1 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: கூடுதல் உதவி கோரும் இலங்கை; 2 பில்லியன் டாலர் வழங்க இந்தியா திட்டம்

மறுபுறம், ஆகஸ்ட் 28, 2018க்குப் பிறகு RuPay கார்டு வழங்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் RuPay PMJDY கார்டுடன் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது வங்கி கணக்கு இல்லாத மக்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏழை வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். KYC செயல்முறையை முடிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் SBI போன்ற பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்.

அதிகமான வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்குகளைத் திறக்க ஊக்குவிக்க, பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் பல வசதிகளை வழங்குகிறது. தொடக்கத்தில், வாடிக்கையாளர்களுக்கு விபத்து மரணக் காப்பீட்டை வழங்கும் RuPay டெபிட் கார்டு வழங்கப்படுகிறது.

இருப்பினும், விபத்து மரணக் காப்பீட்டின் பலனைப் பெறுவதற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இணைக்கப்பட்ட RuPay டெபிட் கார்டுடன் மூலம் நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனைகளை வெற்றிகரமாகச் செய்திருக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.