17 வருடத்திற்கு பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் விற்பனை..!

இந்தியாவில் கட்டுமான திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுமான பொருட்களின் தேவையும், விலையும் அதிகரித்துச் செழிப்பாக இருக்கும் நிலையில் உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

6 கெமிக்கல் பங்குகளை வாங்கி போடுங்க.. லாபம் கிடைக்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை!

ஹோல்சிம்

ஹோல்சிம்

ஹோல்சிம் தனது சர்வதேச வர்த்தகச் சந்தையை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ளது, இதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகிய நிறுவனங்களையும் விற்பனை செய்து விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.

JSW மற்றும் அதானி குரூப்

JSW மற்றும் அதானி குரூப்

ஹோஸ்சிம் இந்த விற்பனைக்காக JSW மற்றும் அதானி குரூப் ஆகிய இரு நிறுவனத்திடமும் முதல்கட்ட பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது. இத்துறையில் இவ்விரு நிறுவனங்களும் சமீபத்தில் தான் நுழைந்திருந்தாலும், மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை வைத்துள்ளது, இதனால் ஹோல்சிம் இவ்விரு நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட்
 

அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட்

அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களின் விற்பனை குறித்து இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து அறிந்த பலர் தெரிவித்துள்ளனர். இதனால் போட்டியும் அதிகமாகவே இருக்கும்.

2வது இடம்

2வது இடம்

அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றுவது மூலம் எளிதாக ஒரு நிறுவனம் இந்தியாவின் 2வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க முடியும். இவ்விரு நிறுவனத்தின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தி அளவு 66 மில்லியன் டன்.

ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா

இந்தியாவில் தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 117 மில்லியன் டன் அளவிலான சிமெண்ட் உற்பத்தி செய்து நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

சுவிஸ் ஹோல்சிம்

சுவிஸ் ஹோல்சிம்

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஹோல்சிம், 2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு போட்டியாளரான லஃபர்ஜுடன் இணைத்து மிகப்பெரிய ஐரோப்பிய சிமெண்ட் மற்றும் கட்டிடப் பொருள் நிறுவனமான LafargeHolcim பெரிய நிறுவனத்தை உருவாக்கியது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

உலகெங்கிலும் எழுந்த பல்வேறு பிரச்சனைகளின் வாயிலாகப் பல மறுசீரமைப்பு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியா உட்பட ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் பல சொத்துக்கள், வர்த்தகத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலையும் உருவானது. தற்போது LafargeHolcim ஒருங்கிணைந்த நிறுவனத்தை, ஹோல்சிம் குழுமம் என மறுபெயரிடப்பட்டது.

பங்கு இருப்பு

பங்கு இருப்பு

இந்தியாவில் ஹோல்சிமின் முதன்மை நிறுவனமாக விளங்கும் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் மூலம் 63.1% பங்குகளை வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அம்புஜா சிமென்ட் நிறுவனம், ஏசிசி-இன் 50.05% பங்குகளை வைத்திருக்கிறது.

இணைப்பு முயற்சி

இணைப்பு முயற்சி

ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Holcim) நேரடியாக ACC இல் மற்றொரு 4.48% பங்குகளை வைத்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல், செலவுகளைக் குறைக்கவும் மற்றும் செயல்பாடு, உற்பத்தி திறனை மேம்படுத்த இரு நிறுவன செயல்பாட்டையும் ஒன்றிணைக்க ஹோல்சிம் முயன்றது வருகிறது, ஆனால் இன்று வரையில் நடக்கவில்லை.

1.14 லட்சம் கோடி ரூபாய்

1.14 லட்சம் கோடி ரூபாய்

புதன்கிழமை நிலவரப்படி, இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் 1.14 லட்சம் கோடி ரூபாய் (15 பில்லியன் டாலர்), இதில் அம்புஜா மட்டும் 73,349 கோடி ரூபாய் (9.7 பில்லியன் டாலர்) ஆக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய M&A திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தை வாங்குவோர் 26% கூடுதல் பங்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Holcim may exit India after 17 years; Ambuja Cement, ACC on sale; Intalks with JSW, Adani group

Holcim may exit India after 17 years; Ambuja Cement, ACC on sale; Intalks with JSW, Adani group 17 வருடத்திற்குப் பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் நிறுவனங்கள் விற்பனை..!

Story first published: Thursday, April 14, 2022, 12:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.