ஈஸ்வரப்பா ராஜினாமாவுக்கு முன் 29 பஞ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்| Dinamalar

பெங்களூரு : அமைச்சர் பதவியை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்வதற்கு முன், 29 பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.பெலகாவி அருகே உள்ள ஹிண்டல்காவை சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல், 35. அரசின் கான்ட்ராக்டரான இவர் கடந்த 12ல் உடுப்பி ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.’

தற்கொலைக்கு முன் தன் சாவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம்’ என அவர் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு குறுந் தகவல் அனுப்பி இருந்தார்.சந்தோஷ் பாட்டீல் தற்கொலை குறித்த தகவல் வெளியான நாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மைசூரில் இருந்தார். அன்றே கிராம வளர்ச்சி துறையில் பணியாற்றும் 29 பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளார்.இதில் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இந்த இடம் மாற்றத்துக்கு முதல்வர் பசவராஜ் பொம்மையும் ஒப்புதல் அளித்துள்ளார்.தற்போது இந்த இடம் மாற்றத்துத்துக்கும், சந்தோஷ் பாட்டீல் மரணத்திற்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.