நிராயுதபாணி கைதியை கொடூரமாக தாக்கும் பொலிஸார் – வெளியானது காணொளி (Video)ரம்புக்கனை பகுதியில் இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்த காணொளி வெளியாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. இதனால் பொலிஸார் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரம்புக்கனை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.