மதுரை சித்திரைத்திருவிழாவில் அழகரை காண குவிந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து நகைகளை பறித்துச்சென்ற 4 பெண்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12.5 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்ட கள்ளழகரை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் மதிச்சியம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கள்ளழகரை தரிசிக்க திரண்டிருந்த பக்தர்களுக்கிடையே புகுந்த 6 பெண்கள் மொத்தம் 22 சவரன் நகைகளை பறித்துச்சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கூட்டம் இருந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் சுமலதா, லில்லி, புஜ்ஜி, மீனாட்சி ஆகிய 4 பெண்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை சித்திரைத்திருவிழாவில் அழகரை காண குவிந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து நகைகளை பறித்துச்சென்ற 4 பெண்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது