பனை ஓலை, வைக்கோல் மூலமாக அலுவலக கான்ஃபரன்ஸ் ஹால்: தமிழக கிராமத்தில் ZOHO ஸ்ரீதர் வேம்பு புதுமை

ZOHO CEO Sridhar Vembu builds new office with mud and straw in village: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மண், வைக்கோல் மற்றும் பனை ஓலை மூலமாக உருவாக்கப்பட்ட தனது நிறுவனத்தின் புதிய கூட்ட அரங்கு மற்றும் அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஜோஹோ (ZOHO). இந்த நிறுவனத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ நிறுவனத்தை முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றியுள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஸ்ரீதர் வேம்பு, தன் பணியிடத்தை தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டார். ‘ஜோஹோ டெஸ்க்’ இங்கிருந்து தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிராண்ட் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உங்க Smart Phone சூடாவதை தடுக்கனுமா? – இந்த 5 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு, மண், வைக்கோல் போன்றவற்றால் கட்டப்பட்ட தனது புதிய அலுவலகத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஸ்ரீதர் வேம்பு, ”புதிய கூட்ட அரங்கு மற்றும் சிறிய அலுவலகங்கள், மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேல்பகுதியானது பனை ஓலையால் மூடப்பட்டிருக்கிறது. வெப்பமான நாளிலும் இந்த கட்டடம் இதமானதாக உள்ளது. நான் இதை மிகவும் விரும்புகிறேன், நான் இந்த கட்டடத்தை எனது அலுவலகமாக மாற்றியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.