மராட்டியத்தில் ஆளுங்கட்சித் தலைவர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: சட்டவிரோத ஒட்டுக்கேட்பு குறித்து அதிகாரிகள் மீது வழக்கு..!

மும்பை: மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் தொலைபேசியை சிறப்பு புலனாய்வு பிரிவினர் 2 மாதங்களாக ஒட்டுக்கேட்டது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினரும் சிவசேனா தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் மட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் Eknath Khadse தொலைபேசியும் ஒட்டுக்கேட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி சிறப்பு புலனாய்வு பிரிவினர் இருவரது தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டுள்ளனர். சிறப்பு புலானாய்வு துறை தலைவராக இருந்த ரேஷ்மி சுக்லா கூடுதல் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி தொலைபேசி ஒட்டுகேட்புக்காக அனுமதி பெற்றிருந்தார். இந்த கடிதத்தின் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளியாகியுள்ளது. சஞ்சய் ராவத்தின் தொலைபேசி மொத்தம் 60 நாட்களும் Khadse-வின் தொலைபேசி 67 நாட்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு செய்ததாக சிறப்பு புலனாய்வு துறை தலைவராக இருந்த ரேஷ்மி சுக்லா உள்பட 10 பேர் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் தொலைபேசி ஒட்டுகேட்புக்கு வேறு பெயர்களை குறிப்பிட்டு உள்துறையின் அனுமதியை பெற்றிருப்பது கண்டுபுடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் மராட்டியத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.