ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பினை 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.2 சதவீதமாக குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இது நுகர்வினை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில், அதிகளவிலான கச்சா எண்ணெய் விலையானது, தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டினை பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இன்னும் குறையுமா?

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

அதோடு நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 3.1% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021 – 22ல் 1.5 சதவீதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2023 – 2024ம் நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமும் 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 7.1 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டிருந்தது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபி நாத், ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனை, பல நாடுகளின் வளர்ச்சி மீண்டு வருவதை பாதித்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியை 4.4 சதவீதத்தில் இருந்து, 3.6 சதவீதமாகவும், 2023ல் 3.8 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாகவும் ஐஎம்எஃப் குறைத்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கணிப்பு
 

ரிசர்வ் வங்கியின் கணிப்பு

முன்னதாக் ரிசர்வ் வங்கியானது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என்று கணித்துள்ளது. இதே 2021 – 22ல் 8.9 சதவீதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. ஆர்பிஐ-யின் இந்த கணிப்பானது , சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பினை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் வளர்ச்சி

ரஷ்யாவின் வளர்ச்சி

இந்தியா தவிர மற்ற சில நாடுகளின் வளர்ச்சி விகிதத்தினையும் சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. இதில் ஜப்பானின் வளர்ச்சி விகிதத்தினையும் ரஷ்யாவின் வளர்ச்சி விகிதத்தினையும் குறைத்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 8.5% சரியலாம் என கணித்துள்ளது. இது 2023ம் ஆண்டில் 2.3% சரியலாம் என்றும் கணித்துள்ளது.

உக்ரைனின் மோசமான நிலை

உக்ரைனின் மோசமான நிலை

இதே உக்ரைன் குறித்து கூறுகையில், உக்ரைனில் தற்போதைய நிலை குறித்து சரியாக கூற முடியாது. அதன் பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கிட முடியாது.ஆக உக்ரைன் வளர்ச்சி குறித்து கூறுவது கடினம். எனினும் உக்ரைன் பொருளாதாரத்தில் மோசமான தாக்கம் இருக்கலாம். இது நடப்பு ஆண்டில் சுமார் 35% சரிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IMF slashes india’s growth forecast to 8.2 percent in FY23

IMF slashes india’s growth forecast to 8.2 percent in FY23/ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.