உக்ரைனின் மரியுபோல் நகரை இன்று ரஷ்யா முழுமையாக கைப்பற்றும்: ரஷ்ய தரப்பு உறுதி

உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என உக்ரைன் முன்மொழிந்ததை அடுத்து, ரஷ்யப் படைகள் முக்கிய எதிர்ப்பு கோட்டையான மரியுபோல் நகரை கைப்பற்றும் என்று அதிபர் விளாடிமிர் புடின் நிர்வாகத்தில் உயர்மட்ட கூட்டாளி ஒருவர் கூறினார்.

எட்டு வாரங்களுக்கு முன்னால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து, பெரிய அளவில் ரஷ்யாவால் எதையும் முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் நகரை இன்றே முழுமையாக கைப்பற்றும் என ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா மிக விரைவில் உக்ரைனை கைப்பற்றி விடும் என சில இராணுவ ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில், கிட்டதட்ட இரு மாதங்களுக்கு பிறகு ரஷ்ய தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்த போரினால், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். நகரங்கள் இடிபாடுகளாக மாறியது.

மேலும் படிக்க | Russia Ukraine War:கடைசி மூச்சு வரை எதிர்கொள்வோம்; உக்ரைன் திட்டவட்டம்

“மதிய உணவு நேரத்திற்கு முன் அல்லது மதிய உணவுக்குப் பிறகு, உக்ரைனின் உள்ள மிக பெரிய எஃகு ஆலையான அசோவ்ஸ்டல் (Azovstal) என்னும் முக்கிய ரஷ்ய கூட்டமைப்பின் படைகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கும்” என்று உக்ரைனில் போராடி வரும் ரஷ்யாவின் செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் கூறினார்.

தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில், முற்றுகையிட்டுள்ள ரஷ்யப் படைகள் முழுக் கட்டுப்பாட்டை எடுக்க முயல்வதால், கடுமையான போர் மூண்டுள்ளது. 

முன்னதாக, எஃகு ஆலையில் சிக்கியுள்ள குடிமக்கள் மற்றும் வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என கிவ் முன்மொழிந்துள்ள நிலையில், இதற்கான சிறப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா பதிலளித்ததா என்பது குறித்த தகவல் இல்லை. 

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.