தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று அவுன்ஸூக்கு 2003 டாலர்களை எட்டிய நிலையில், 1948 டாலர் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது.

இது அமெரிக்காவின் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்துகள், அமெரிக்க பத்திர வருவாய் ஏற்றம் ஆகியவை தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது.

3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!

அமெரிக்க பத்திர சந்தையானது டிசம்பர் 2018ல் 2.907 என்ற லெவலில் இருந்து, 2.975 என்ற லெவலுக்கு உச்சம் தொட்டுள்ளது.

பத்திர சந்தைகள் ஏற்றம்

பத்திர சந்தைகள் ஏற்றம்

இங்கிலாந்தின் 10 ஆண்டு பத்திரம் 7 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இதே 10 ஆண்டு ஜெர்மன் பத்திரம் 6 3/4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எப்படியிருப்பினும் அமெரிக்கா டாலரின் மதிப்பானது 100.578 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 101.30 என்ற லெவலை தொட்டது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம் அதிகரிப்பு

வட்டி விகிதம் அதிகரிப்பு

இந்த ஆண்டு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 3.5% ஆக உயர்த்துவதற்கு, விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும். இது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை நிராகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்திற்கு எதிராக கால் விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

6 முறை அதிகரிக்கலாம்
 

6 முறை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் 2022ல் ஆறு முறை வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என கூறப்பட்டது. ஆக இதுவும் தங்கம் விலையினை அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான தரவுகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

எப்படியிருப்பினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, சீனாவில் கொரோனா லாக்டவுன் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். சர்வதேச நாணய நிதியமும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், சர்வதேச வளர்ச்சி விகிதத்தினை குறைத்துள்ளது. மேலும் பணவீக்க விகிதமும் உச்சம் தொடலாம் என எச்சரித்துள்ளது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம். இதன் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1963 – 1980 டாலர்களாக இருக்கலாம். இதே சப்போர்ட் லெவலாக 1941 – 1923 டாலர்களும் இருக்கலாம் என அபான்ஸ் குழுமத்தின் EVP & தலைமை கேப்பிட்டல் & கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hawkish fed comments and sharp rise in bond yield to keep gold prices under pressure

Hawkish fed comments and sharp rise in bond yield to keep gold prices under pressure/தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

Story first published: Thursday, April 21, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.