தேர்வெழுதும் மாணவர்களுக்காக கல்வித்துறை உதவி எண் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு:இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச போன் எண்களை அறிவித்துள்ளது.
இது குறித்து, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இம்முறை இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு, நாளை துவங்கி, மே 18 வரை நடைபெறவுள்ளது. மாநிலத்தின் 1,076 தேர்வு மையங்களில், காலை 10:15 மணி முதல், மதியம் 1:30 மணி வரை தேர்வு நடக்கும்.தேர்வெழுத ஆஜராகும் மாணவர்கள், தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., – பி.எம்.டி.சி., உட்பட, மற்ற போக்குவரத்துக்கழக பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
தேர்வு தொடர்பான குழப்பம், சந்தேகங்கள் இருந்தால், அதை நிவர்த்தி செய்து கொள்ள, இலவச உதவி எண் — 080 – 2308 0864 துவங்கப்பட்டுள்ளது.இந்த தொலைபேசி எண், தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை செயல்படும். மாணவர்கள், பெற்றோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, தேவையான தகவல் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.