தொடரும் உக்ரைன் போர்.. உலகத்துக்கே சோறு போட முடியுமா இந்தியாவால்?

உக்ரைன் போர்
தொடர்வதால் உலக நாடுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது. உணவுப் பஞ்சமும் பல நாடுகளில் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும் பொறுப்பு இந்தியாவுக்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

கடந்த வாரம்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்தி மோடி பேசியபோது, உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்ய
இந்தியா
தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அது சாத்தியமா என்பது விவாதத்துக்குரியதாகும்.

இந்தியாவில் உணவு உற்பத்தி சிறப்பாகவே உள்ளது. மேலும்இந்திய மக்களுக்குத் தேவையான அளவுக்கு உணவுப் பொருட்கள் இருப்பில் உள்ளன. எனவே உலக நாடுகளுக்கும் உணவு கொடுக்க இந்தியா தயார் என பிரதமர் கூறியிருந்தார். உலக வர்த்தக நிறுவனம் மட்டும் கேட்டுக் கொண்டால் அடுத்த நாளே ஏற்றுமதியை இந்தியா தொடங்கி விடும் என்றும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து போர் நீடிப்பதாலும்,
ரஷ்யா
மீது பொருளாதார தடை நீடிப்பதாலும் உலக நாடுகளில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. உலக அளவில் உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் முதல் இரு நாட்களாக ரஷ்யாவும், உக்ரைனும் திகழ்கின்றன. அதேபோல சர்வதேச சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில், ரஷ்யாவும், உக்ரைனும் சர்வதேச சந்தையில் 55 சதவீதத்தை வைத்துள்ளன. ரஷ்யா, உக்ரைனின் பார்லி பொருள் ஏற்றுமதி அளவு 17 சதவீதமாகும். இந்த சப்ளை தற்போது அப்படியே அடி வாங்கியுள்ளது. இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இதுதொடர்பாக ரோம் நகரைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் உபாலி கல்கேடி அரட்சிலகே கூறுகையில், இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அரிசி, கோதுமையை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் உணவுப் பொருள் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்றார்.

அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் உலகிலேயே 2 வது இடத்தில் உள்ளது இந்தியா. ஏப்ரல் மாத நிலவரப்படி 74 மில்லியன் டன் உற்பத்தியை செய்திருந்தது இந்தியா. இதில் 21 மில்லியன் டன் உணவுப் பொருட்களை இந்தியா ரிசர்வில் வைத்துள்ளது. பொது விநியோகத் திட்டத்திற்காகவும் கணிசமான அரிசி, கோதுமையை இந்தியா இருப்பு வைத்துள்ளது. மீதமுள்ள உணவுப் பொருளை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலக நாடுகள் பலவும் கூட உணவுப் பொருள் பற்றாக்குறையில் உள்ள நிலையில் எல்லா நாடுகளுக்கும் இந்தியாவால் உணவு சப்ளை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.