நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு! கைகொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?

நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரி சாராத காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தியை அதிகரித்து நிலைமையை சரிகட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தேசிய மின் தொகுப்பிலிருந்து வர வேண்டிய 795 மெகாவாட் திடீரென கிடைக்காமல் போனதால் தமிழ்நாடு இருளில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சாரம் வாங்க முடியவில்லை என்றும் நிலக்கரி தட்டுப்பாடே இதற்கு காரணம் என்றும் அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக நிலக்கரி சாராத மின் உற்பத்தி பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அடியோடு சரிவு | Wind power in Tamil  Nadu has plummeted | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News |  Tamil News Online | Tamilnadu News
இந்நிலையில் காற்றுப் பருவம் இந்தாண்டு வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் காற்றாலை மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. காற்றாலைகளால் தற்போது 2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி ஆகும் நிலையில் வரும் 25ஆம் தேதிக்கு பிறகு அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மே முதல் வாரத்தில் 5 கோடி யூனிட்டுகளை கூட காற்றாலை மின் உற்பத்தி தொட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காற்றாலை மின்சாரம் கணிசமாக கிடைப்பது மூலம் அதிகரிக்க உள்ள மின்சார தேவையை ஓரளவு ஈடுகட்ட முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.