நோத்சீ வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு தேவையான சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான  உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டு வந்த வடகடல் நிறுவனம், 2015 – 2019 வரையான காலப் பகுதியில் பாரிய பின்னடைவை சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.