பார்லி., மீது விமானத்தை மோத சதி? அமெரிக்காவை அதிர வைத்த பீதி!| Dinamalar

வாஷிங்டன்-விமானத்தை மோதி தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, அமெரிக்க பார்லிமென்டில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.அமெரிக்காவில், 2001 செப்., 11ல் அல் – குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தினர்.இதில் நியூயார்க்கின் இரட்டை கோபுர உலக வர்த்தக மையம் இடிந்து நொறுங்கியது. ராணுவத் தலைமையகமான ‘பென்டகன்’ உட்பட பல இடங்களில் தாக்குதல் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.அச்சுறுத்தல் இல்லைஇந்நிலையில், விமானம் வாயிலாக, ‘கேபிடோல்’ எனப்படும் அமெரிக்க பார்லி., வளாகம் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க போலீசார் நேற்று முன்தினம் மாலையில் திடீர் எச்சரிக்கையை வெளியிட்டனர்.

இதையடுத்து, பார்லி., வளாகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பார்லி., கூட்டத் தொடர் நடக்காததால், அப்போது எம்.பி.,க்கள் யாரும் அங்கு இல்லை.அமெரிக்க போலீஸ் வெளியிட்ட இந்த எச்சரிக்கை நாடு முழுக்க வேகமாக பரவியது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். ஆனாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என, போலீஸ் தரப்பில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, மக்கள்நிம்மதி அடைந்தனர்.

பார்லிமென்ட் வளாகத்துக்கு சற்று தொலைவில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் ஒரு போட்டி நடக்கிறது.குழப்பம்இதன் துவக்க விழாவின் ஒரு பகுதியாக, ‘பாராசூட்’ வாயிலாக வீரர்கள் மைதானத்தில் இறங்கஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கான விமானம் வருவதை, ‘ரேடார்’ வாயிலாக பார்த்த போலீசார், பார்லி., மீது தாக்குதல் நடத்த முயற்சி நடப்பதாக பயந்து, எச்சரிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.இந்நிகழ்ச்சி குறித்து, பேஸ்பால் போட்டி ஏற்பாட்டாளர்கள், போலீசாரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காததே, குழப்பத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.