ரயில் தண்டவாளத்தில் நின்று “செல்பி” எடுத்தால் ரூ.2,000 அபராதம் – தெற்கு ரயில்வே

சென்னையில், ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்போருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

இதையடுத்து, படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம், படியில் பயணம் செய்வோருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.