15 வயது சிறுமி தாக்கப்பட்டு பாழடைந்த வீட்டில் வீசி சென்றதாக கூறப்படும் விவகாரம்.. காதலனுடன் சேர்ந்து சிறுமி நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை இரு மர்ம நபர்ககள் கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசி சென்றதாக கூறப்படும் விவகாரத்தில், புதிய திருப்பமாக சிறுமி காதலனுடன் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருவாரூரில் இரு தினங்களுக்கு முன் பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்ட15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில், அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவனான காதலன் சந்தோஷ் உடன் சிறுமி தனிமையில் பேசி கொண்டு இருந்ததாகவும், நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கடத்தபட்டு பாழடைந்த வீட்டில் மயங்கி இருந்தது போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் காதலனான சந்தோஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.