'கே.ஜி.எஃப் 2' பட நிறுவனத்துடன் இணையும் சுதா கொங்கரா: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!

சுதா கொங்கரா
இயக்கத்தில்
சூர்யா
நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ‘
சூரரைப் போற்று
‘. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்தப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டினார்கள். சூர்யாவின் கம்பேக்காக இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

போடு வெடிய… துவங்கியது ‘கேஜிஎஃப் 3’ பட வேலை: வெளியான மாஸ் அறிவிப்பு..!

இந்நிலையில் நேற்றைய தினம் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான அறிவிப்பில், ‘சில உண்மை கதைகள் சொல்லப்பட தகுதியானவை, சரியாகவும் சொல்லப்பட வேண்டும்.
ஹோம்பலே பிலிம்ஸ்
நிறுவனத்தில், இயக்குநர் சுதா கொங்கராவுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் எல்லாப் படங்களைப் போலவே இதுவும் இந்தியாவின் கற்பனையை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்ற ஒரு கதை’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனம் கடைசியாக யாஷ் நடித்த பான் இந்தியன் பிளாக்பஸ்டர் படமான ‘கேஜிஎஃப் 2’-ஐ தயாரித்தது. இந்தப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதில் சூர்யா நடிக்கவுள்ளரா? அல்லது வேறு நடிகர் நடிக்கவுள்ளரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎப் தயாரிப்பு நிறுவனத்துடன் சுதா கொங்கரா கூட்டணியா – என்ன கதை தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.