தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஆண்கள் 30, பெண்கள் 27 என மொத்தம் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,447 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,136 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 39 ஆகவும், சென்னையில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.