மரியுபோலில் இருந்து தப்பித்த 79 பேர் 3 பேருந்துகளில் ஸபோரிஸியா வந்தடைந்தனர்

ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகரத்தில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு தப்பித்த 79 பேர் 3 பேருந்துகளில் நேற்று ஸபோரிஸியா நகரத்திற்கு வந்தடைந்தனர்.

சிலர் தங்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்திருந்தனர். போரில் மரியுபோல் நகரம் தீவிரமான தாக்குதல்களை மட்டுமல்லாமல், மிக மோசாமான மனிதாபிமான பேரழிவையும் சந்தித்துள்ளது.

ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 2 மாதங்களாக மரியுபோலில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.