முன்னெச்சரிக்கை டோஸ் டில்லியில் இலவசம் | Dinamalar

புதுடில்லி :டில்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போட அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று பரவல், நேற்று முன் தினம் ஒரே நாளில் 1,009 ஆக உயர்ந்தது. இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரு டோஸ் தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த அனைவருக்கும் டில்லி அரசின் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.