வருங்கால மனைவியை காப்பாற்ற குளத்தில் குதித்த இளைஞரின் உயிர் தியாகம் ..! கரைசேர இயலாத சோகம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி அருகே குளத்தில் மூழ்கிய வருங்கால மனைவியை காப்பாற்ற நீருக்குள் குதித்த இளைஞர் , அந்த பெண்ணை மீட்க இயலாததால் இருவர நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, உரிகம் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் சிவா. இவருக்கும் தேன்கனிக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த அபி என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்க்ப்பட்டது.

அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் இருவரது குடும்பத்தினரும் உரிகம் அருகே உள்ள ஜிமநத்தம் கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது நிச்சயிக்கப்பட்டதால் வருங்கால மனைவி அபி மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் வனப்பகுதியில் உள்ள குளக்கரைக்கு சென்றுள்ளார் சிவா.

அந்த குளத்தில் நீரை பார்த்த ஆர்வத்தில் அபி குளிப்பதற்காக இறங்கியுள்ளார், எதிர்பார்த்ததை விட அது ஆழமாக இருந்துள்ளது. அபிக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.

தனது வருங்கால மனைவி நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த சிவா, அந்த பெண்ணை காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளார் ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது. உடன் சென்ற சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் உறவினர்கள் விரைந்து வந்து இருவரது சடலங்களையும் மீட்டனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது சடலங்களையும் ஒன்றாக அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் , உறவினர்களிடம் எடுத்துக் கூறி இரு சடலங்களையும் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு பின்னர் இருவரது சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுக்காக தன்னுடையே உயிரை தியாகம் செய்த இளைஞரை குறித்து அப்பகுதி மக்கள் வியந்து பேசினாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.