உக்ரைன் போர்: புதினிடம் பலமுறை கேள்வி கேட்ட மோடி… போரிஸ் ஜான்சன் வெளியிட்ட தகவல்

பிரிட்டிஷ் தூதரகம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பூமியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள். இது எங்கே செல்கிறது என்று நினைக்கிறீர்கள் என பல முறை பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக தெரிவித்தார். இந்தியர்களுக்கு அமைதி வேண்டும். அதற்கு ரஷ்யர்கள் உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த மாத தொடக்கத்தில் கிவ்வில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை மீண்டும் திறப்பதாகவும் அறிவித்தார்.

மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு பிரிட்டிஷ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜான்சன், ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்காத இந்தியாவை விமர்சிப்பதில் இருந்து விலகினார்.

அவர் பேசுகையில், “இந்தியர்கள் குறிப்பாக நரேந்திர மோடி, புச்சாவில் என்ன நடந்தது என்பதை நன்கு அறிந்தவர் என்பதை நீங்கள் ஏற்க வேண்டும். மோடியுடன் பேசியதில், அவர் பல முறை இப்பிரச்சினையில் தலையீட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது இந்திய நண்பர்களின் ரகசியம் அல்ல என்று நம்புகிறேன். பூமியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள். இது எங்கே செல்கிறது என்று நினைக்கிறீர்கள் என பல முறை புதினிடம் மோடி கேட்டுள்ளார். இந்தியாவுக்கு அமைதி வேண்டும். அதற்கு, ரஷ்யர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறார்கள். இதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரஷ்யாவுடன் இந்தியா ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. இதை எல்லோரும் புரிந்துகொள்கிறார்கள். பல தசாப்தங்களாக மதிக்கிறார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களில் மிகவும் சுவாரஸ்யமானது. என்னவென்றால், இன்றைய நிகழ்வுகளின் தொடர் அழுத்தத்தால் பிரிட்டனும் இந்தியாவும் ஊக்குவிக்கப்பட்டு, கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது சர்வாதிகார வற்புறுத்தல். ரஷ்யாவிலோ அல்லது சீனாவிலோ – எங்கிருந்தாலும் ஒன்றாகச் செய்ய வேண்டும்” என்றார்.

அதேசமயம், பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது அறிக்கையில் மோடியுடன் உக்ரைனையோ அல்லது ரஷ்யாவையோ குறிப்பிடவில்லை. உங்களை G7 இல் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு, சர்வாதிகார வற்புறுத்தலின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என கூறியிருந்தார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஜான்சன், அடுத்த வாரம், உக்ரைனின் கிவ்வில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை மீண்டும் திறக்கவுள்ளோம். இக்கட்டான காலக்கட்டத்தில், அந்த பிராந்தியத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் தூதகர்களுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்

இங்கிலாந்தும், எங்கள் நட்பு நாடுகளும் புதினின் நடவடிக்கையை செயலற்ற நிலையில் பார்க்க மாட்டோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஒன்றாக இணைந்து, பகிரப்பட்ட கவலைகளை எதிர்கொள்கிறது. உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகார வற்புறுத்தல், நமது நாடுகளை பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாற்ற ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை, இந்தியா தனது சொந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தவும்,இந்தோ பசிபிக் பகுதியில் முக்கிய பகிரப்பட்ட நலன்களைப் பாதுகாக்கவும் உதவும் என்றார்.

உக்ரைனைப் பற்றி, இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு மோடி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தை வலியுறுத்தினோம். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தையின் போது இங்கிலாந்திடம் இருந்து எந்த அழுத்தமும்” இல்லை என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார். அவர் கூறுகையில், உக்ரைனில் நிலைமை மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக கூறினார்.

போரிஸ் ஜான்ஸ்சன் கூறுகையில், நிலம், கடல், காற்று, விண்வெளி மற்றும் இணையம் என அனைத்த புதிய அச்சுறுத்தல்களை சந்திக்க நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். இதில் புதிய போர் ஜெட் தொழில்நுட்பம் மற்றும் கடலில் ஏற்படும் அச்சுறுத்தலை கண்டறிந்து பதிலளிக்க உதவும் கடல்சார் தொழில்நுட்பங்களும் அடங்கும் என்றார்.

மோடி கூறுகையில், பாதுகாப்புத் துறையில் உற்பத்தி, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்திற்கு இங்கிலாந்தின் ஆதரவை வரவேற்கிறோம் என்றார்.

வரவிருக்கும் தசாப்தத்தில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக, இங்கிலாந்து Open General Export Licence-ஐ (OGEL) வழங்கிடும். இதன் மூலம், அதிகாரத்துவத்தை குறைப்பது மட்டுமின்றி மற்றும் பாதுகாப்பு உபகாரணங்களின் விநியோக நேரத்தை குறைத்திடும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இது எங்கள் முதல் OGEL ஆகும் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்தது.

மேலும், காலிஸ்தானி குழுக்கள் மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை கையாளவும், புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக ஜான்சன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.