கேஜிஎஃப் ராக்கி பாய் அம்மா தமிழ் சீரியலில் நடித்துள்ளாரா? வைரலாகும் முக்கிய தகவல்

KGF 2 Actress Archana Jois In Suntv Serial : சமீபத்தில் வெளியாகி இந்திய பாக்ஸ்ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் படம் கேஜிஎஃப் 2. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்றது. பிரபல கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தில் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் தெலுங்கு இந்திய மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் 2 சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகன் யாஷ்க்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் மத்தியில் பெரிய பாராட்டுக்களை பெற்று வருபவர் அர்ச்சனா ஜோஸ்.

27 வயதாகும் அவர் 4 வருடத்திற்கு முன்பு வெளியாக கேஜிஎஃப் முதல் பாகத்தில் தனது 23 வயதில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கேஜிஎஃப் படங்கள் வசூல் சாதனை நிகழ்த்துவதற்கு அவரின் நடிப்பும் முக்கிய காரணம். இவர் மேலும் உணர்ச்சிகரமான வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கரகோஷங்கள் கி்டைத்து வருகிறது.

கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தின் மூலம் அறிமுகமான அர்ச்சனா தொடர்ந்து, விஜயரதா, ராஜ்குமார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹன்டிசி பிரியேரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அர்ச்சனா ஜோஸ் கேஜிஎஃப் படத்திற்கு முன்பே தமிழில் ஒரு சீரியலில் நடித்து வந்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பாக இருந்த சுப்புலட்சுமி என்ற தொடரில் தான் அர்ச்சனா நடித்து வந்துள்ளார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியல் ஒளிபரப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த தகவல் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், சுப்புலட்சுமி சீரியல் குறித்து இணையத்தில் ரசிகர்கள் தேட தொடங்கியுள்ளனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் ரசிகர்களை கவனம ஈர்த்த ராக்கி பாய் அம்மா சன்டிவி தொடரில் நடித்துள்ளாரா என்று பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.