சமந்தாவ இன்னும் டைவர்ஸ் பண்ணல: நாக சைதன்யா பரபரப்பு தகவல்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
சமந்தா
. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இவரும் நாக சைதன்யாவும் அண்மையில் பிரிந்தது திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.

அடிக்கடி ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: பகீர் கிளப்பும் நடிகர் நகுலின் மனைவி.!

இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் மணப்பெண் நடிகையாக இருக்கக் கூடாது என நாகசைதன்யா கண்டிஷன் போட்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது வருத்தத்தை அளிப்பதாகவும். தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும்
நாக சைதன்யா
தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விவேக் நினைவு தினம்; மேடையில் அழுத பிரபல காமெடி நடிகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.