நெல்லையில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து… நலம் விசாரித்த முதல்வர் – என்ன நடந்தது?

திருநெல்வேலியில் சுத்தமல்லி அருகே பழவூர் இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் கொடை விழா முடிந்த பிறகு அங்கு வைக்கட்டு இருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும் போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, ஆறுமுகம் பிளக்ஸ் போர்டு கழட்ட வைத்திருந்த கத்தியால் மார்க்ரட் தெரசாவை குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் ஆறுமுகத்தை கைது செய்தனர். கத்திக்குத்து காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக ஆறுமுகம் மீது மார்க்கரேட் திரேஷா வழக்குப்பதிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே, இந்த தாக்குதல் முன்விரோதம் பகை என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காயமடைந்த பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என பதிவிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.