பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மாரடைப்பால் காலமானார்! தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது


பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார்.

ரிஷி மூலம், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா, ராஜாதி ராஜா, ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் போன்ற 100க்கும் அதிகமான படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் அண்ணன், மகன், நண்பன் என பல்வேறு விதமான குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளவர் சக்கரவர்த்தி (62)

ஒருக்கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானார் சக்கரவர்த்தி.
இந்நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு சக்கரவர்த்தி மரணமடைந்தார்.

காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பிய போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தவர்.

அவருக்கு சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சக்கரவர்த்தி மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.