அசாமின் குவகாத்தி மாநகராட்சியில் பாஜக வெற்றி…ஆடிப்பாடி கொண்டாடிய தொண்டர்கள்.!

அசாமின் குவகாத்தி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 52இல் பாஜக வெற்றிபெற்றதை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குவகாத்தி மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக 52 இடங்களிலும், அதன் கூட்டணியில் உள்ள அசாம் கண பரிசத் 6 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆம் ஆத்மி, அசாம் ஜாதிய பரிசத் ஆகியன ஒவ்வொரு இடங்களில் வென்றுள்ளன. தேர்தல் வெற்றியை பாஜக தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.