ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலை: விடுமுறையை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலை காரணமாகவும், ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்த காரணத்தால் குளு குளு காலநிலை நிலவுகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமில்லாது, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
image
இதையடுத்து போக்குவரத்தை சீர்செய்ய சிறப்பு போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரயிலில் பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவை நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.