சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி கடலில் 25 கிலோமீட்டர் நீச்சலடித்து சாதனை.!

சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடலில் 25 கிலோமீட்டர் நீச்சலடித்து சாதனை படைத்தார்.

பெருமாள் – சாந்தி தம்பதியரின் 10 வயது மகளான சஞ்சனா, 4 வயது முதலே, நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

4 மாதங்களுக்கு முன், சஞ்சனா கடலில் 12 கிலோமீட்டர் தூரம் நீச்சலடித்திருந்த நிலையில், இன்று, வி.ஜி.பி கடற்கரை முதல் மெரினா கடற்கரை வரை, 25 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து தனது முந்தைய சாதனையை  முறியடித்தார்.

ஓய்வு பெற்ற நீதியரசர் கிருபாகரன் சஞ்சனாவுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.