நடிகையை திருமணம் செய்துகொள்ளாதே… அஜித்துக்கு அட்வைஸ் செய்த நடிகர்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத உச்சநட்சத்திரமான
அஜித்
அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு சில படங்களில் நடித்த அஜித்துக்கு வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான
ஆசை
படம் முதல் வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் செம ஹிட்டடித்து தேசிய விருதை பெற்றது. மேலும் இப்படம் அஜித்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்றது. அதன் பிறகு காதல் மன்னன், அவள் வருவாளா போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் வெளியான
வாலி
திரைப்படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தை பார்த்த தளபதி..! என்ன சொன்னார் தெரியுமா ?

இதைத்தொடர்ந்து அவர் நடித்த அமர்க்களம் திரைப்படம் அவரின் திரைவாழ்க்கையில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் மறக்கமுடியாத படமாக மாறியது. அப்படத்தின் போது தான் அஜித் நடிகை ஷாலினியை காதலித்தார்.

அப்போது அஜித்தின் நண்பரும், பிரபல நடிகருமான
ரமேஷ் கண்ணா
அஜித்தை பார்க்க அமர்க்களம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அப்போது இவர்கள் காதல் பற்றி தெரியாத ரமேஷ் கண்ணா அஜித்திடம் நடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே என அட்வைஸ் செய்துள்ளார்.

அஜித்தும் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே ரமேஷ் கண்ணா சொல்வதை கேட்டுக்கொண்டார். அதன் பிறகு தான் இவர்கள் காதல் விஷயம் பற்றி ரமேஷ் கண்ணாவிற்கு தெரிய வந்ததாம். இந்நிலையில் 2000 ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.