மகாராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள சைகான் கிராமம் அருகே நேற்று காலை 10.30 மணியளவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், நேற்றைய நிலவரப்படி 5 பெண்கள் உள்பட 6 பேர்  உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரவி கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்பாஜோகையில் உள்ள ராடி கிராமத்திற்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். சைகான் அருகே எதிர்திசையில் இருந்த வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அம்பஜோகை நகரில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, 5பெண்கள், சிறுவர்கள் என இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கொரோனா பரவல் உயர்வு எதிரொலி – முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27ம் தேதி ஆலோசனை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.