ஏப்ரல்25: சிஎஸ்கே அணி முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்ற தினம் இன்று…

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்,  சிஎஸ்கே அணி வெற்றி பெற்று முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்றது. இன்றைய தினத்தை சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடிவருகின்றனர்.

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் 20ஓவர் கொண்ட ஐபிஎல் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 2010ஆம் ஆண்டு வரை இந்தத் தொழில்முறை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ண மாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளராகவும் இருந்தார்.  அதைத்தொடர்ந்து அணியின் கேப்டனராக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டு, தற்போதுவரை பணியாற்றி வருகிறார்.

சிஎஸ்கே அணிக்கான ‘விசில் போடு’ என்னும் விளம்பர பாடல் 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் இன்றுவரை சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்புடன் தொடர்கிறது.

4 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள சென்னை அணி, முதன்முதலாக கடந்த 2010ம் ஆண்டு முதல்முறையாக கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டும் அடுத்த கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்தியன் பிரீமியர் லீக் அணிகளில் அதிக வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ள அணி சிஎஸ்கே என்ற பெருமைக்குரியது.

2010-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, மும்பை இந்தியன்சும், சிஎஸ்கே அணியும் களம் கண்டன. அந்த ஆண்டின் தொடரில், 4 அணிகள் 14 என்ற சமமான புள்ளிகள் பெற்றதால் சென்னையும், பெங்களூரும் அரையிறுதியில் கால் பதித்தன. அதன் பின்னர் இறுதிக்கு சென்ற சென்னை அணி, மும்பை இந்தியன்சை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் சாம்பியனானது. சிஎஸ்கே அணியின் முதல் வெற்றியை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பிரமாண்டமாக கொண்டாடினார்.

2010ம் ஆண்டு ஏப்ரல் 24ந்தேதி அன்று ஐபிஎல் தொடர்ன்  இறுதிப்போட்டி நடைபெற்ற நாள் . அன்றைய தினம், சிஎஸ்கே அணி முதன்முதலாக ஐபிஎல் கோப்பை வென்ற தினம் இன்று…  இன்றைய நாளை சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.