கல்வி மாஃபியாக்களை தோலுறித்த ‘செல்ஃபி’ :  ஓடிடியில் வெளியானது 

மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்  வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’.

பொறியியல் மாணவரான ஜி.வி.பிரகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவரகளை கல்லூரியில் சேர்க்கும் ஏஜெண்டாக, ஆள் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கெளதம் மேனன் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருந்தார் . மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், குணநிதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள்.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கல்விக் கொள்ளைப் பற்றி விழிப்புணர்வூட்டிய, புதிய கதைக் களம் என்று பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து தற்போது ஆஹா தமிழ் ஓடிடியில் ’செல்ஃபி’ வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.