"சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை யாருக்கும் இல்லை" – முன்னாள் அமைச்சர் வளர்மதி

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தான் எங்கள் தலைமை அவர்களுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,’ 11 மாத கால திமுக ஆட்சியில் அம்மாவின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என மக்கள் குறை கூறுகின்றனர்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு அதற்கு வேறு பெயர்களை சூட்டி தங்களது செல்வாக்கை நிரூபித்து கொள்கிறார்கள். முதல்வராக எடப்பாடி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல பேசி வருகின்றனர், சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதற்கு ஒரு திட்டம் கூட இல்லை.
image
சசிகலாவை ஜனநாயக முறைப்படி அதிமுகவின் பொதுச் செயலராக ஆக்குவோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த வளர்மதி
அதிமுகவின் தலைமை யார் என்பது சமீபத்தில் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது, அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கான சிந்தனை எந்த ஒரு தொண்டர்களுக்கும் கிடையாது. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்களது முடிவை ஏற்றுக் கொண்டனர், அதிமுகவின் தலைமை ஒபிஎஸ், இபிஎஸ் மட்டுமே, அவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது.
image
அதிமுக கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். அதில் தகுதியானவர்களை கட்சி தான் தேர்ந்தெடுக்கும். மேலும், மதுரை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக வந்து தேர்தல் நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.