நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் பிறந்த தினம்.!!

புதுமைப்பித்தன் :

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும்.

இவர் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக மலேரியா தினம் :

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். 

ஆகவே, இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.