மோகன்லாலின் ’12த் மேன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றதால், மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி ‘12த் மேன்’ படத்தில் இணைந்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ போன்றே த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘12த் மேன்’ படத்தை மலையாள முன்னணி தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ப்ரோ டேடி’ தயாரிப்பாளரும் ஆண்டனி பெரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது. அனில் ஜான்சன் இசையமைக்க, சதீஷ் குருப் இசையமைத்துள்ளார்.
மோகன்லாலின் ‘ப்ரோ டேடி’, ‘ஆரட்டு’ உள்ளிட்டப் படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், ‘12த் மேன்’ ஓடிடியில் வெளியாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் என்று நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. வரும் மே மாதம் வெளியாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் – ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம் 2’ படமும் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.