பிரான்ஸ்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி… மீண்டும் அதிபரானார் இமானுவேல் மேக்ரான்!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான்,  மரைன் லு பென்-ஐ தோற்கடித்துத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இரண்டு சுற்றுகளாக நடந்த தேர்தலில் முதல் சுற்றுத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் 12 வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டனர்.

வாக்களிக்கும் இமானுவேல் மேக்ரான்

ஆனால் யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை. அதில் இருவர் மட்டுமே அடுத்த சுற்றுத் தேர்தலைச் சந்தித்தனர். அந்த இரண்டு வேட்பாளர்களான  இமானுவேல் மேக்ரான் – மரைன் லு பென் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது. 

இந்த நிலையில், இந்த தேர்தலுக்கான முடிவு நேற்று மாலை முதல் வெளியாக தொடங்கியது. ஈஃபில் டவர் பகுதி பூங்காவில் பெரும் திரையிலும் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், 2017-ம் ஆண்டை போலவே இந்த முறையும் இமானுவேல் மேக்ரான் மரைன் லு பென்-னை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

மரைன் மரைன் லு பென்

இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரான் 52.2 சதவிகித வாக்குகளும் மரைன் லு பென் 41.8 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் அதிபராக இருக்கும் ஒருவரே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அதற்கு முக்கிய காரணமாக இமானுவேல் மேக்ரானின் தேர்தல் வாக்குறுதிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. 

வாக்களிக்கும் மரைன் லு பென்

அதில், முக்கியமான வாக்குறுதிகளாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் வரியைக் குறைப்பது, அத்தியாவசிய பொருள்களுக்குப் பூஜ்ய வரி, இளம் தொழிலாளர்களுக்கு வருமான வரி விலக்கு, மக்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் பிரான்ஸ் நாட்டை முதல் இடத்துக்குக் கொண்டுவருவது போன்றவை இருக்கிறது

மேலும், இம்மனுவில் மேக்ரான் மீது மக்களுக்கு அதிருப்தியும் உள்ளது என வாக்களிக்காதவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளதின் மூலம் தெரியவருகிறது என அந்த நாட்டுச் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. 1963-க்கு பிறகு மிக அதிகமாக வாக்கு செலுத்தாதவர்கள் உள்ள தேர்தல் இதுவே.

மரைன் லு பென்

இந்த தேர்தலில் 28 சதவிகித மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளனர், எனத் தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக  மரைன் லு பென், “இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும்  பிரான்ஸ் மக்களை ஒருபோது கைவிட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மேக்ரான். இமானுவேல் மேக்ரானுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.