நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
விவேக் மறைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அவர் மனைவி அருட்செல்வி இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
மறைந்த திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்களின் மனைவி திருமதி அருட்செல்வி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, நடிகர் திரு. விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார். pic.twitter.com/OecdlJc0Cn
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 25, 2022
அப்போது நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை மனுவாக ஸ்டாலினிடம் அளித்தார் அருட்செல்வி.
இந்த சந்திப்பின் போது விவேக்கின் நெருங்கிய நண்பரும், நகைச்சுவை நடிகருமான செல்முருகனும் உடனிருந்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை முதல்வர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.