ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய இந்திய மாலுமிகள் 7 பேர் விடுவிப்பு

புதுடெல்லி:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைப்பற்றினர். கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்பட வெளிநாட்டினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர். 
இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் 7 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு மந்திரி அல்புசைதி உறுதிப்படுத்தினார். மீட்கப்பட்ட 14 பேர் மஸ்கட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.