WFH or RTO: இந்திய நிறுவனங்களின் முடிவென்ன.. ஊழியர்களுக்கு சாதகமா?

கொரோனா என்ற வார்த்தை இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ? தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளை உருவாக்கி மக்களை பயத்திலேயே ஆழ்த்தியிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறை கொரோனா வந்ததும் மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்தனர். வேலையினை இழந்தனர். பலர் விலைமதிப்பற்ற தங்களது சொந்தங்களையே இழந்தனர்.

பல மாதங்கள் நீடித்த கொரோனாவினைக் கட்டுபடுத்த அரசு கடுமையான முயற்சிகளை எல்லாம் கையாண்டது. இது 15 நாட்கள் 1 மாதம் 2 மாதம் வரை இருக்கலாம் என்று நினைத்த நிலையில், வருடக் கணக்கில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சீனாவை ஓரம்கட்ட இந்தியா-வின் சூப்பர் திட்டம்..!

கடும் சவால்கள்

கடும் சவால்கள்

ஆனால் இந்த கொரோனாவின் வருகைக்கு -பின்னர் மக்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறியுள்ளது. ஊழியர்கள் தங்களது பணிகளில் அதிகளவிலான சவால்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்த ஊழியர்கள், தற்போது மீண்டும் அலுவலகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா அடுத்த அலைக்கு தயாராகிவிட்டது.

ஹைபிரிட் மாடல் பணி

ஹைபிரிட் மாடல் பணி

இந்த நிலையில் தற்போதைய நிலையில் பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடல் பணியினை கையில் எடுத்துள்ளன. ஹைபிரிட் மாடல் பணிக்காக தங்களது சொந்த ஊர்களில் பணி புரிந்து வந்த ஊழியர்கள், தற்போது மீண்டும் அலுவலகம் செல்வதற்கு ஏதுவாக நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனாவுக்கு முன்பை விட தற்போது செலவினங்கள் அதிகம் என கூறப்படுகின்றது.

பணவீக்க அழுத்தம்
 

பணவீக்க அழுத்தம்

தற்போது உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக எரிபொருள் விலை மிக மோசமாக ஏற்றம் கண்டுள்ளது. சில்லறை பணவீக்கமும் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை மட்டும் லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் அதிகரித்துள்ளது.

செலவுகள் அதிகரிப்பு

செலவுகள் அதிகரிப்பு

எப்படியிருப்பினும் பல மாதங்கள் கழித்து அலுவலகத்தில் வேலை பார்ப்பது என்பது புத்துணர்ச்சியூட்டுவதாக உள்ளது. அது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. எனினும் எரிபொருள் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் மக்கள் வாழ்வதற்கான செலவினங்களும் கூடியுள்ளன. ஆக இது அவர்களை பாதிக்கலாம் என ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வசதியாக இருந்தால், வேறு அலுவலகம் அருகில் இருந்தால் அங்கிருந்தும் பணிபுரிய அனுமதிக்கிறது என லைவ் மிண்ட் செய்தியொன்று கூறுகின்றது. கொரோனா பெருந்தொற்று கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒன்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். எந்த வாய்ப்பினையும் இழக்க கூடாது என்பது தான்.

அலுவலகம் வந்து பணிபுரிதல்

அலுவலகம் வந்து பணிபுரிதல்

ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர். சிலர் ஹைபிரிட் மாடல் பணியே சிறந்தது என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. ஊழியர்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தொற்று நோய்க்கு முன்பைபோலவே பணிபுரியும் கலாச்சாரத்திற்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 அலைக்கான சாத்திய கூறு

4 அலைக்கான சாத்திய கூறு

எனினும் பெரும் நகரங்களில் 4 அலைக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள், தற்போது உள்ள நிலையை போன்றே பணிபுரிய உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். பலர் அலுவலத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிலர் வீட்டில் இருந்தே பணிபுரிவதில் ஆர்வமாக உள்ளனர். உதாரணத்திற்கு பி&ஜி ஹெல்த், கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஹைபிரிட் மாடல் பணியினை தொடர்ந்து வருகின்றது., இந்த மாடலிலேயே நாங்கள் தொடர்ந்து செயல்படுகின்றோம். இது ஒரு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது என கூறியுள்ளது.

ஹைபிரிட் மாடல் பணி தான் பெஸ்ட்

ஹைபிரிட் மாடல் பணி தான் பெஸ்ட்

இதே போன்று பஜாஜ் எலக்ட்ரிகல்ஸின் தலைமை ஹெச்.ஆர், சுமன் குமார் கோஷ், ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வந்து பணிபுரிவதிலும், மற்ற ஊழியர்களுடன் கலந்து பேசுவதிலும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக 2 ஆண்டுகளாகவே வீட்டில் இருந்து பணிபுரிந்ததன் மூலம் சோர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் கொரோனாவின் தாக்கம் என்பது நிலையற்றதாக உள்ளது. ஆக ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம். ஆக அதனை உறுதி செய்யும் வகையில் இருப்பதால், நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றோம். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும் ஹைபிரிட் பணி மாடலையும் பயன்படுத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

எனினும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இது ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது சில பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய தூண்டும்.

எனினும் பல நிறுவனங்களிலும் ஹைபிரிட் மாடல் பணியே அதிகளவில் பரிந்துரை செய்யபட்டு வருகின்றது. இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வினை அளிக்கும். குறிப்பாக பேயு, புக்மைஷோ, Alvarez & Marsal,உபர் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடல் பணியினை தேர்வு செய்துள்ளன. இது ஊழியர்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதுகாப்பினை அளிக்கும். தற்போதுள்ள நிலைக்கு இதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் கூறியுள்ளன

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

WFH or RTO: In the midst of corona and inflation do companies tell employees to come to the office?

WFH or RTO: In the midst of corona and inflation do companies tell employees to come to the office?/WFH or RTO: இந்திய நிறுவனங்களின் முடிவென்ன.. ஊழியர்களுக்கு சாதகமா?

Story first published: Monday, April 25, 2022, 13:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.