அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகம்: இளம் சிறுத்தைகளுக்கு திருமா முக்கிய வேண்டுகோள்

Thirumavalavan advices to VCK members don’t go BJP office for gifting Ambedkar books to Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அம்பேத்கரின் புத்தங்களை வழங்கிட, பாஜக அலுவலகம் செல்ல வேண்டாம் என விசிகவினருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களை அவர் படித்து தெளிவு பெற அனுப்பவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து விசிகவைச் சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு , அண்ணன் திருமா அவர்கள் கையொப்பமிட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும்,மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களை அவர் படித்து தெளிவு பெற நாளை அனுப்பி வைக்கப்படுகிறது… ” என பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: ஆளுனரை போஸ்ட்மேனுடன் ஒப்பிட்ட ஸ்டாலின்: என்ன ரியாக்ஷன்?

இந்தநிலையில், பாஜக தலைவருக்கு புத்தகம் வழங்க வேண்டாம் என விசிகவினருக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.