உலக பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடம் பிடித்தார் கவுதம் அதானி.!

உலக பணக்காரர்கள் வரிசையில் அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் கவுதம் அதானி 5-வது இடத்தை பிடித்தார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதானி நிறுவனத் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 123 புள்ளி 7 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தையில் வாரென் பபெட் நிறுவனமான Berkshire Hathawayயின் பங்கு மதிப்பு 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து அவரது சொத்து மதிப்பு 121 புள்ளி 7 பில்லியன் டாலராக சரிந்தது.

மற்றொரு பெரும் இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 104 புள்ளி 7 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.