கலைஞரின் பிறந்தநாள் அரசு விழா… 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – சட்டசபை ஹைலைட்ஸ்

Tamilnadu Assembly Highlights : தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் பொது மற்றும் வேளான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து. ஒவ்வொரு துறைகளின் மானிகோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட பல துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.

50000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகத்தின் மின் உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில், 2022-23-ம் ஆண்டுகளில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் புதிய விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா மற்றும் ரூ 1649 கோடி செலவில். 100 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். என்றும் கூறியுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும். மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஊதிய உயர்வால் ஆண்டொன்றுக்கு ₨16.67 கோடி கூடுதல் செலவாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேரு நிதியுதவி :

கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ₨6,000 லிருந்து ₨18,000ஆக உயர்த்தப்படும் என்றும், விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ₨2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்டக் குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும்கூறியுள்ளார்.

டாஸ்மாக் வருமானம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ₨2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ₨33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்றும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ₨36,013 கோடி வருவாய் வந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை மாநகராட்சி

சட்டசபை உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சித்துறை அமைச்சர் கேஃ.என்.நேரு திருப்பூர் மாவட்டம் உடுமலையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும், மடத்துக்குளத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடியும் போது பெரிய நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் :

சட்டசபை உறுப்பினர் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எவ்வளவு செலவானாலும் தமிழக கடலோர பகுதியில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 36 இடங்களில் கடல்நீர் உட்புகுந்ததால், மக்கள், கால்நடைகள், விவசாயிகள் பெரும் அவதியுறுவதாக தெரிவித்தார்.

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி, சென்னை ஓமாந்தூர் அரசு தோட்ட வளாகத்தில் கலைஞரின் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருப்பதற்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.